உலக வரைபடத்தில் தமிழகத்தை உயர்த்தி வைத்ததில் டாக்டர் கே.எம்.செரியனுக்கு மிகப்பெரிய பங்குண்டு. இந்தியாவின் முதல் பைபாஸ் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து முடித்த சாதனையாளர். குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர்களில் முன்னோடி.
செயலிழந்த எத்தனையோ இதயங்களை மீண்டும் துடிக்கச்செய்து, பலருக்கு மறுபிறவி கொடுத்த மருத்துவர்
ஒரு முறை அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது, படுக்கையில் சாய்ந்த அடுத்த நிமிடமே உறங்கிவிடுவேன். மருத்துவர் என்பதால், எப்போது வேண்டுமானாலும் தொலைபேசி அழைப்புகள் வரும். இரவு தூங்கும்போது அழைப்பு வந்தால்கூட, பேசிவிட்டு மீண்டும் தூங்கி விடுவேன். என் தூக்கத்துக்கு இந்த போன் அழைப்புகள் தொந்தரவாக இருந்ததில்லை.நல்ல தூக்கம் வேண்டுமா… யாரைப் பற்றிய கெட்ட சிந்தனையும் கூடாது. ஒருவரைப் பற்றித் தவறாக எண்ணுவதால், நமக்கு என்ன நன்மை… நம்மிடம் ஒருவர் உதவி எதிர்பார்த்து அது நியாயமாக இருந்தால், அதைச் செய்யக்கூடிய பலம் நமக்கிருந்தால் நிச்சயமாக உதவலாம். இவையெல்லாம் மனதுக்கு அமைதியையும் நிறைவையும் கொடுக்கும். அவை நல்ல தூக்கத்தைக் கொண்டு வரும். 26 வயதில் நான் ஆஸ்திரேலியாவில் இருந்தபோது முன்பின் தெரியாதவர்கள்கூட எனக்கு உதவினார்கள். என் அத்தியாவசியத் தேவைகளுக்கு அவை கைகொடுத்தன. அப்படி நானும் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.”
இப்பேர்பட்டவர் நிரந்தரமாக தூங்கி விட்டவருக்கு ஆந்தை ரிப்போர்ட்ர் சார்பில் அஞ்லி

