Home Uncategorized தென் மாவட்டங்களில் ஜன. 30, 31-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

தென் மாவட்டங்களில் ஜன. 30, 31-ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு

தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் (ஜன. 28, 29) வறண்ட வானிலை நிலவக்கூடும். நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இரவு அல்லது அதிகாலை நேரத்தில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

தமிழகம் நோக்கி வீசும் கிழக்குதிசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுவதால் வரும் 30, 31-ம் தேதிகளில் தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்.1, 2-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று வானம்ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம்நிலவ வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

Exit mobile version