Home Uncategorized தென் தமிழத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

தென் தமிழத்தில் கன மழை பெய்ய வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், தென் தமிழக கடலோரம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.

கனமழை கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி தென்காசி தேனி திண்டுக்கல் மதுரை விருதுநகர் சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனக்கூறியுள்ளது.

Exit mobile version