இந்த கனரக வாகனங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கனிம வளங்கள் எடுத்துச் செல்லப்படுவதால் சாலைகள் சேதம் அடைவதுடன் சாலைகளுக்கு அடியில் போடப்பட்டுள்ள குடிநீர் குழாய்களும் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகிக் கொண்டிருக்கிறது.
மாவட்டத்தின் பல பகுதிகளில் கடும் குடிநீர் கட்டுப்பாடு இருக்கும் நிலையில் இந்த அவலம் குறித்து தென்காசி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவருமான கே.ரவி அருணன் அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் பல மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பொறுத்து பொறுத்துப் பார்த்த ரவி அருணன் இன்னும் பத்து நாட்களில் இதை சரி செய்யா விட்டால் எங்கெல்லாம் உடைப்பு ஏற்பட்டு இருக்கிறதோ அங்கெல்லாம் எங்களது இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தினர் சங்கு ஊதும் போராட்டம் நடத்துவார்கள் என்று எச்சரித்திருக்கிறார்.
அரசு நிர்வாகம் செத்துவிட்டது என்பதை சுட்டிக் காட்டவே இந்த போராட்டம் என்கிறார் அவர்.
