இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் திமுக 25.78 சதவீத வாக்கு சதவீதத்தையும் அதிமுக 20.43 சதவீதத்தையும் காங்கிரஸ் 10.81 சதவீதத்தையும் பாஜக 10.69 சதவீதத்தையும் பெற்றுள்ளது. தென் சென்னை, கோவை, தருமபுரி, மதுரை, நீலகிரி தொகுதிகளில் அதிமுக 3ஆம் இடம் பிடித்துள்ளது.
கன்னியாகுமரியில் அதிமுக 4ஆம் இடத்திலும் 20 தொகுதிகளில் அதிமுக 2ஆம் இடத்திலும் உள்ளது. அதிமுக போட்டியிட்ட 33 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக மூன்றாம் இடத்தில் உள்ளது. ராமநாதபுரத்தில் அதிமுக வேட்பாளரை மூன்றாம் இடத்திற்கு தள்ளி 2-ஆம் இடத்தை ஓபிஎஸ் பெற்றுள்ளார்.
