Home Uncategorized தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள்

தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள்

அடுத்த ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ வாரியம் வருகின்ற நவம்பர் 28-ஆம் தேதி அல்லது டிசம்பர் முதல் வாரத்தில் வெளியிட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதைப்போல அடுத்த ஆண்டு (2025) பிப்ரவரி மாதம் 15-ஆம் தேதி தியரி தேர்வுகள் நடைபெறவுள்ளது. அதற்கான செய்முறைத் தேர்வுகள் ஜனவரி 1, 2025 இல் தொடங்கப்படவுள்ளது.

அதைப்போல, இந்த ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 5, வரை சி.பி.எஸ்.இ குளிர்காலப் பள்ளிகளில் செய்முறைத் தேர்வுகள் நடைபெறவுள்ளது. மேலும், அடுத்த ஆண்டும், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள 26 நாடுகளில் உள்ள 8,000 பள்ளிகளில் சி.பி.எஸ்.இ தேர்வு நடத்தப்படவுள்ளது.

Exit mobile version