சேலம் மாடர்ன்_தியேட்டர்ஸ் அதிபர் தெய்வத்திரு டி.ஆர். சுந்தரம் ஐயாவின் நினைவு தினம் இன்று August 30 (16.07.1907 – 30.08.1963) மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
இவர் தான் மலையாள மொழியில் தயாரிக்கப்பட்ட முதல் திரைப்படமான (பாலன் 1938) என்ற படத்தை உருவாக்கியவர். முதல் சிங்களப் படத்தை எடுத்தது இவரே தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட முதல் ஆங்கிலத் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்சும் அமெரிக்க திரைப்பட நிறுவனமும் இணைந்து 1952ஆம் ஆண்டில் முதல் ஆங்கிலத் திரைப்படத்தை – தி ஜங்கிள் என்ற பெயரில் தயாரித்தனர்.
1940 இல் பி. யூ. சின்னப்பா நடிப்பில் வெளிவந்த முதல் தமிழ் இரட்டை வேடம் திரைப்படமான உத்தமப் புத்திரன் என்ற படத்தை இயக்கி தயாரித்த வரும் இவரே. 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான “மனோன்மணி” என்ற திரைப்படம் தான் அக்காலத்தில் தமிழில் உருவான மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
படத்தின் சண்டைக் காட்சியில் 3 ஆயிரம் துணை நடிகர்கள் பயன்படுத்தப்பட்டன. தமிழில் வெளியான முதல் வண்ணத் திரைப்படம் 1956ஆம் ஆண்டில் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்த வரும் டி. ஆர். சுந்தரம் முதலியார் ஆகும்.
இதை மலையாளத்தில் ”கண்டம் வெச்ச கொட்டு” என்ற பெயரிலும் தயாரித்தார். டி. ஆர். சுந்தரம் 1961ஆம் ஆண்டில் கண்டம் வெச்ச கொட்டு என்ற மலையாளத் திரைப்படத்தை தயாரித்தார் அம்மொழியில் எடுக்கப்பட்ட முதல் வண்ணத் திரைப்படம் இதுவே ஆகும்.
புகழ்பெற்ற நகைச்சுவை நடிகை மனோரமா கதாநாயகியாக நடித்த முதல் திரைப்படம் 1963ஆம் ஆண்டில் வெளியான கொஞ்சும் குமரி டி.ஆர். சுந்தரத்தின் 97ஆவது திரைப்படமாக அமைந்தது. 1938 ஆம் ஆண்டில் “மாயா மாயவன்” என்ற படத்தை சுந்தரம் தயாரித்தார். தமிழில் எடுக்கப்பட்ட முதல் சண்டைப்படம் இது. இதில், டி.கே.சம்பங்கி என்ற பிரபல நாடக நடிகர் கதாநாயகனாக நடித்தார்.
நொட்டானி என்பவர் இப்படத்தை இயக்கினார். மூன்று தனித்தனிக் கதைகளை கொண்ட முதல் இந்திய திரைப்படமான சௌ சௌ என்ற படத்தை தயாரித்து வரும் இவரே. இவர் தயாரித்த பொன்முடி என்ற பட காமெராமேனுக்கு பிரெஞ்சு அரசு விருதளித்துப் பாராட்டியது. மேலும் ஐந்து முன்னாள் முதலமைச்சர்கள் NTR, MGR, Kalaignar, Janaki MGR, Jeyalalitha இவரிடம் சம்பளத்துக்கு வேலை பார்த்தார்கள்.கவிஞர் கண்ணதாசன், மனோரமா போன்றவர்கள் அறிமுகபடுத்தியவர். .
