சென்னை தீவுத்திடலில் சுற்றுலா பொருட்காட்சி தொடங்கியது இந்திய சுற்றுலா, தொழில் பொருட்காட்சி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தீவுத்திடலில் நடத்தப்படும்.
கொரோனா காரணமாக 2020, 2021ம் ஆண்டுகளில் நடைபெறவில்லை. இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை தீவுத்திடலில் நேற்று (ஜனவரி 4) இப்பொருட்காட்சி தொடங்கியது.
இதன் திறப்பு விழாவில் தமிழ்நாடு அரசின் அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். 70 நாட்கள் இக்கண்காட்சி நடைபெறும்.

