Home Uncategorized திமுகவினரை திருப்திபடுத்த பக்தர்களை அலைகழித்த அறநிலையத்துறை – இந்து முன்னணி கடும் கண்டனம்

திமுகவினரை திருப்திபடுத்த பக்தர்களை அலைகழித்த அறநிலையத்துறை – இந்து முன்னணி கடும் கண்டனம்

திமுகவினருக்கு அனுசரணையாக இருப்பதற்காக பக்தர்களை பாடாய்படுத்திய அறநிலையத்துறை.! 

அப்பனே முருகா.! 
மீண்டும் ஒரு சூரசம்காரம் நடத்திடு.! 
அறநிலையத்துறையை அடியோடு அழித்திடு.!

திருச்செந்தூரில் நடந்த சூரசம்கார விழாவில் ஆலயத்தின் சார்பில் பக்தர்களுக்காக கட்டப்பட்ட தங்கும் விடுதியில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு அறை கூட கொடுக்காமல், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் தங்க வைத்து, முன்கூட்டியே முன்பதிவு செய்த பக்தர்களை சிரமத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். 

மேலும் கார் பாஸ் மற்றும் சிறப்பு தரிசனம் போன்றவைகள் திமுக சார்ந்த அரசியல்வாதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு பக்தர்களுக்கு வழங்காமல் பெண்கள் மற்றும் குழந்தைகளை மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். 

இறை நம்பிக்கைக்கு எதிராக பேசும் திமுக, ஆலய திருவிழாவில் அரசியல் செய்து பக்தர்களை சிரமப்படுத்தியதற்கு திமுக அரசை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

Exit mobile version