Home Uncategorized டிரைவிங் லைசென்ஸ் தேர்வுகளுக்கு புதிய விதி அமல்..!

டிரைவிங் லைசென்ஸ் தேர்வுகளுக்கு புதிய விதி அமல்..!

ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகளுக்கு புத்தி விதிகள் அமல் என போக்குவரத்து ஆணையர் அறிவிப்பு.

ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கான தேர்வு தொடர்பான புதிய விதிகளை போக்குவரத்து ஆணையர் வெளியிட்டுள்ளார்.

அதில், போக்குவரத்து ஆணையர் அவர்களின் தலைமையில் காணொலி மூலம் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வழங்கிய அறிவுரையின்படி, அனைத்து ஓட்டுநர் உரிமத் தேர்வுகளும் கணினியில் முன்பதிவு செய்த பின்னரே நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வாரத்தில் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் பொது மக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும்.

இத்தேர்வுகளுக்கு கணினி மூலமாக முன்பதிவு செய்திட ஏதுவாக பொதுமக்கள் தங்களது வசதிக்கேற்ப நாள் மற்றும் நோத்தினை தேர்ந்தெடுத்துக்கொள்ள வழிவகை செய்யப்பட வேண்டும்.

மேலும், செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரு தினங்கள் ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூலம் வரும் விண்ணப்பங்களுக்கான தேர்வு நடத்தப்பட வேண்டும். மேற்காணும், உத்தரவின்படி அனைத்து சரக் அலுவலர்கள், அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அனைத்துப் பகுதி அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர்களும் செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exit mobile version