Home Uncategorized டிராகன் குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு

டிராகன் குழுவினரை ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டு

டிராகன் திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் அழைத்து பாராட்டினார். திரைப்படத்தின் எழுத்து மிகச்சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்ட ரஜினி, “அற்புதமாக எழுதியிருக்கீங்க” என்று அவரை பாராட்டியதாக அஸ்வத் தனது பதிவு மூலம் பகிர்ந்துள்ளார். இயக்குநராக சாதிக்க நினைக்கும் பலருக்கும் இது ஒரு பெரிய உற்சாகமாக அமைந்துள்ளது. டிராகன் திரைப்படம் கதைக்களத்திலும், வசூலில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளதுடன், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

Exit mobile version