Home Uncategorized திருச்செந்தூர் யானை ரிலீஸ்…

திருச்செந்தூர் யானை ரிலீஸ்…

கடந்த 18 ஆம் தேதி திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர்.

இதையடுத்து அந்த யானை கடந்த 10 தினங்களாக அறையில் அடைத்து வைக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு கோவில் ஆனந்த விலாச மண்டபத்தில் சிறப்பு யாகசலை பூஜைகள் நடந்தது.

இதில் கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீர் யானை தெய்வானைக்கு தெளிக்கப்பட்டது. 11 நாட்களுக்கு பிறகு இன்று யானை வெளியே கொண்டு வரப்பட்டது.

அதிகாலையில் யானையை குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கி பாகன்கள் யானையை வெளியே அழைத்து வந்தனர்

Exit mobile version