திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிரடி சோதனையில் ரூ.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக 55 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 60 விமான பயணிகளிடம் நடத்திய சோதனையில் 11 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
