வைரத்தாலியும், பொட்டுக்காரையும், மரகத பதக்கமும் தங்கப்பூணூலும் காசுமாலையும் ஏனைய ஆபரணங்களும் அணிந்து தங்கக்கவசத்துடன் நித்தியா சுமங்கலியாக மங்களத்தை வழங்கும் அம்பிகையாக மீனாட்சி அம்மனும், கல்யாணக்கிரீடம், சித்தர் பதக்கம், நீலநாயகப்பதக்கம், நலப்பதக்கமும் அணிந்து அருகில் அமர்ந்திருக்கும் பிரியாவிடையுடன் அதிரூப சொக்க வைக்கும் அழகுடன் சோமசுந்தரப்பெருமானும் இன்று காலை நடைபெறும் கோலாகலமான திருக்கல்யாண வைபவத்திற்கு தயாராக இருக்கும் திருக்கோலம்.
