Home Uncategorized திருக்கடையூர் கார்த்திகை முதல் சோமவார புறப்பாடு

திருக்கடையூர் கார்த்திகை முதல் சோமவார புறப்பாடு

திருக்கயிலாயப் பரம்பரை #தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான, திருக்கடையூர்  ஸ்ரீஅபிராமி அம்பிகா சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வர ஸ்வாமி திருக்கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவாரத்தை முன்னிட்டு சுவாமிக்கு 1008 சங்காபிஷேகமும், அதனைத் தொடர்ந்து இரவு பஞ்சமூர்த்திகள் வெள்ளி வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.

இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீன ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version