Home Uncategorized திருக்கடையூர் பஞ்சாக்கை மகா கும்பாபிஷேக விழா

திருக்கடையூர் பஞ்சாக்கை மகா கும்பாபிஷேக விழா

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வர சுவாமி தேவஸ்தானம் – உபகோயிலான  பஞ்சாக்கை (வைப்புத் தலம்)  ஸ்ரீ_கற்பகாம்பிகை சமேத ஸ்ரீஅக்னிபுரீஸ்வர_சுவாமி திருக்கோயில்

நூதன ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா தருமையாதீன 27வது ஸ்ரீலஸ்ரீ_கயிலை_குருமகாசந்நிதானம் திருமுன்னர் வெகு சிறப்பாக நடைபெற்றது!!

இவ்விழாவில் திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய கந்த பரம்பரை சூரியனார் கோவில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், திருக்கயிலாய பரம்பரை நாச்சியார் கோவில் ஆதீன ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம், தருமையாதீன திருக்கூட்டத்து தம்பிரான் சுவாமிகள், சிவாச்சாரியார்கள், ஓதுவாமூர்த்திகள், ஆதீன அன்பர்கள், ஆதீன அடியவர்கள் தேவஸ்தான அதிகாரிகள் ஊழியர்கள் சிப்பந்திகள் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தார்கள்!!!

இவ்விழாவில் தருமை ஆதீனம் 27 ஆவது ஸ்ரீலஸ்ரீ கயிலை குருமகாசந்நிதானம் அவர்கள் தமது திருக்கரங்களால்

பஞ்சாக்கை சிவஸ்ரீ சு.நாகராஜ சிவாசாரியாருக்கு பொன்னணி அணிவித்தும்

பஞ்சாக்கை சிவஶ்ரீ மணிகண்ட சிவாசாரியாருக்கு சிவாகம கலாநிதி தங்கபதக்க விருது வழங்கியும்

காஞ்சிபுரம் சு.செல்வக்குமார் ஓதுவாருக்கு

“திருமுறைக் கலாநிதி” விருது

முனைவர் திரு. சி.சிவசங்கரன் அவருக்கு “தருமை ஆதீனப் புலவர் விருது,

திருச்சேறை திரு. கி.ரெங்கநாத பட்டாச்சாரியாருக்கு “மேளக்கர்த்தா கலாநிதி” விருது,

மயிலாடுதுறை திரு. க. குமாருக்கு

“ பந்தல் கட்டமைப்புக்கலை கலாநிதி”

விருது தங்கபதக்கம் சாதரா அணிவித்து பட்டநற்சான்றிதழ் வழங்கியருளினார்கள்!!!

Exit mobile version