திருமலை திருப்பதி திருக்குடை ஊர்வலம் 2024 … ஹிந்து தர்மார்த்த சமிதியினால் நடத்தப்படும் இவ்விழா நேற்று காலை 10 மணிக்கு பூக்கடை சென்ன கேசவப் பெருமாள் திருக்கோயிலில் , சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு , திருக்குறுங்குடி ஜீயர் மடம் ராமானுஜ ஜீயர் 50 ஆவது பட்டம் ( வர்த்தமான சுவாமி) அவர்கள் ஆசி வழங்க இனிதே தொடங்கியது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மலர் மாலையும், 250 ஆண்டுகளாக ஏழுமலையானுக்கு சமர்ப்பிக்கப்பட்டு வரும் 11 வெண்கொற்றற் குடைகளும், ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அக்டோபர் 7 ஆம் தேதி திருமலையில் சமர்ப்பிக்கப்படும்.
இந்நிகழ்வில் , நேற்று மாலை 5 மணியளவில் பைராஹி மடம் தலத்திலிருந்து குடைகள் ஊர்வலம் தொடங்கும் நேரம் வானத்தில் ஒரே நேரத்தில் 4 கருடன்கள் வட்டமிட்ட காட்சி மெய்சிலிர்ப்பை ஏற்படுத்தியது.
பக்தர் ஒரு சேர கோவிந்தா, நாராயணா என்று முழங்கியது வானளாவ ஒலித்தது. ஒரு லட்சம் பக்தர்களுக்கு மேல் திரண்ட இந்த திருக்குடை ஊர்வலம் உண்மையிலேயே தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மீகத் திருவிழா தான்.
இதனை சிறப்பாக நடத்திவரும் ‘அருட்பணிச்செம்மல்’ திரு. வேதாந்தம் ஜி அவர்கள் , ‘ஆன்மீகச் செம்மல்’ திரு. ஆர்.ஆர். கோபால்ஜி அவர்கள் மற்றும் மெய்யன்பர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவகள்!
