Home Uncategorized திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் -சின்ன சேஷ* வாகனத்தில் சுவாமி வீதிஉலா காட்சி

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் -சின்ன சேஷ* வாகனத்தில் சுவாமி வீதிஉலா காட்சி

திருமலை திருப்பதி பிரம்மோற்சவம் இரண்டாம் நாள் காலை இன்று *சின்ன சேஷ* வாகனத்தில் சுவாமி வீதிஉலா காட்சி *சின்ன சேஷ வாகனத்தில் சிறப்புகள்* பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நாகங்களின் நான் *வாசுகி* என்றார். சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பசாமி கிருஷ்ணராக காட்சி தருவார்.

ஏழுமலையானுக்கு அனந்தன் (பாம்பு )என்பது சிறப்பு வாய்ந்தது அவருக்கு ஆடை அணிகலன்கள் படுக்கை அனைத்திலும் சேஷன் இருக்கிறார் அதனால்தான் முதலில் பெரிய சேஷ வாகனம் பின் சின்ன சேஷ வாகனத்தில் காட்சி தருகிறார்.

இவரை நாம் தரிசனம் செய்தால் குண்டலினி யோக பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம் மேலும் வெற்றி பெறுவதற்கு தேவையான விவேக சக்தி மற்றும் பிறவி சுழற்சியை நீக்கி மோட்சத்தை தருவார்.

Exit mobile version