Home Uncategorized சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க கூட்டுறவு துறை நடவடிக்கை – அமைச்சர் ஐ.பெரியசாமி

கூட்டுறவு துறை சார்பில் சாலையோர கடைகளுக்கு கேஸ் சிலிண்டர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் முகவரி இல்லாமல் இருக்கும் சாலையோர கடைகளுக்கு கூட்டுறவு துறை மூலம் 2 கிலோ,5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டமானது பரிசோதனை முறையில் ஒரு வாரத்தில் திருவல்லிக்கேணியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மேலும், கூட்டுறவு சொசைட்டி மூலம் சாலையோர கடைகளுக்கு ஒரு வாரத்தில் கேஸ் சிலிண்டர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

Exit mobile version