திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 4 குடும்பங்களை சேர்ந்தவர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்களில் 2 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு 2 ஆண்டு காலம் ஏழுமலையான் கோவிலில் பணியாற்றவும், அவர்களில் ஒருவரை தலைமை அர்ச்சகர்களாக நியமிக்கவும் கோவில் தேவஸ்தானம் வாய்ப்பளித்து வருகிறது.
இந்நிலையில், அர்ச்சகர்களிடையே ஏற்பட்ட மனகசப்பை போக்க ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒவ்வொரு குடும்பத்திலும் ஒவ்வொருவரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலைமை அர்ச்சகர் வாய்ப்பு வழங்கி உள்ளார்.
இந்நிலையில், 4 குடும்பங்களில் வாரிசு பாரம்பரிய அர்ச்சகத்துவத்தின்படி 8 பேரை ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்களாக ஆந்திர அரசு நியமித்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டுக்கு பிறகு 14 ஆண்டுக்கு பின்னர் இந்த புதிய அர்ச்சகர்களின் நியமனம் நடைபெற்றுள்ளது. அவர்கள் ஏழுமலையானுக்கு பாத சேவை செய்து பணியில் இணைந்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 8 பேரும் தேவஸ்தானத்தின் நிரந்தர ஊழியர்களாவர்.
