Home Uncategorized திருப்பதி கோயிலில் மசால் வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி கோயிலில் மசால் வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூண்டு, வெங்காயம் சேர்க்கபடாத மசால் வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தானம் முடிவு

திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் தினந்தோறும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. அதில், வாழை இலையில் சாதம், சாம்பார், ரசம், பொரியல், சட்னி, சர்க்கரை பொங்கல் ஆகியவை பிரசாதமாக பரிமாரப்படுகிறது

இத்துடன் சேர்த்து வெங்காயம், பூண்டு இல்லாமல் மசால் வடைகளை தயாரித்து சோதனை முறையில் 5 ஆயிரம் பக்தர்களுக்கு நேற்று வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 4-ம் தேதி முதல் அனைத்து பக்தர்களுக்கும் மசாலா வடையுடன் அன்னபிரசாதம் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்

Exit mobile version