திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று
பரவலை தடுக்கும் விதமாக கட்டாயம் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனை செய்ததற்கான நெகட்டிவ் சான்று கொண்டு வர வேண்டும்.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லை என்பதால் அவர்கள் 3 நாட்களுக்கு முன்பாக எடுத்த கொரோனா பரிசோதனைக்கான நெகட்டிவ் சான்றிதழ் கொண்டுவந்தால் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
