Home Uncategorized திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்

திருப்பதியில் சந்திரபாபு நாயுடு சாமி தரிசனம்

ஆந்திர மாநிலத்தில் நான்காவது முறையாக சந்திரபாபு நாயுடு நேற்று முதல்வராக பதவியேற்றார். நேற்று இரவு தனது மகன் அமைச்சர் லோகேஷ் மற்றும் குடும்பத்தினருடன் தனி விமானத்தில் திருப்பதி வந்தார்.

திருமலைக்கு சென்று இரவு தங்கி இன்று காலை ஏழுமலையான் கோயிலில் வழிபாடு செய்தார். முன்னதாக கோயில் மகாதுவாரம் முன்பு ( ராஜகோபுர வாசல் ) இஸ்தி கப்பால் மரியாதையுடன் அர்ச்சகர்கள் வரவேற்று சுவாமி தரிசனம் செய்து வைத்தனர்.

கோயிலுக்கு வெளியே பக்தர்கள் கூட்டத்தை பார்த்தவுடன் நேரடியாக அவர்கள் மத்தியில் நடந்து சென்று வணக்கம் தெரிவித்தார்.

Exit mobile version