திருப்பதியில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் முன்பதிவு இன்று அதாவது ஆகஸ்ட் 24ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் ஒதுக்கீடு முன்பதிவுக்கான டிக்கெட் இன்று மாலை 3 மணிக்கு வெளியிடப்படும். பக்தர்கள் இந்த வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம்.
பிரம்மோற்சவத்திற்கு பிறகு நடக்கும் வருடாந்திர உற்சவங்களும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளதால், பக்தர்களுக்கு இந்த முன்பதிவு டிக்கெட் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

