Thursday, March 12, 2026
HomeUncategorizedதிருவையாறு ஆடிப்பூரப் பெருவிழா அழைப்பிதழ்

திருவையாறு ஆடிப்பூரப் பெருவிழா அழைப்பிதழ்

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு  ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில், தனிக்கோயில் கொண்டு வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் அளித்து, ஐயன் தந்த இருநாழி நெல் கொண்டு 32 அறங்களை வளர்த்து, காமக்கோட்டத்து பெரிய நாச்சியாராக விளங்கக்கூடிய ஸ்ரீ தர்மசம்வர்த்தினி (ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி) அம்பாளுக்கு ஆடிப்பூரப்_பிரம்மோற்சவம் சிறப்புற இவ்வருடம் வருகிற (29/07/24) திங்கள் அன்று தொடங்கி (08/08/24) வியாழன் வரை கீழே குறிப்பிட்டுள்ளவாறு நடைபெற உள்ளது!!!

(29/07/24) – 1ம் நாள் – காலை  
துவஜாரோகணம் (கொடியேற்றம்) 
இரவு  வெள்ளி படிச்சட்டம்
(30/07/24) – 2ம் நாள் – இரவு ஆதிசேஷ வாகனம்
(31/07/24) – 3ம் நாள் – இரவு கிளி வாகனம்
(01/08/24) – 4ம் நாள் – இரவு காமதேனு வாகனம்
(02/08/24) – 5ம் நாள் – இரவு வெள்ளி_ரிஷப வாகனம் 
(03/08/24) – 6ம் நாள் – இரவு சிம்ம வாகனம்
(04/08/24) – 7ம் நாள் – ஆடி அமாவாசை அப்பர் கயிலைக்காட்சி விழா –  இரவு  அன்ன வாகனம்
(05/08/24) – 8ம் நாள் – இரவு  குதிரை வாகனம்
(06/08/24) – 9ம் நாள் – காலை திருத்தேர் 
(07/08/24) – 10ம் நாள் –  ஆடிப்பூரம் காலை மர ரிஷப வாகனத்தில் எழுந்தருளி காவிரியில் தீர்த்தம் கொடுத்தல், இரவு வெள்ளி_படிச்சட்டம் , துவஜாவரோகணம் ( கொடியிறக்கம்) சப்தபிரதக்ஷிணம்
அனைவரும் வருக!!! ஸ்ரீ அறம் வளர்த்த நாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் அருளைப் பெருக!!!

 

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments