தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான திருவையாறு பூலோக கயிலாயம் ஸ்ரீ பஞ்சநதீஸ்வர சுவாமி தேவஸ்தானம் – ஸ்ரீ அறம்வளர்த்தநாயகி உடனாகிய ஸ்ரீ ஐயாறப்பர் திருக்கோயிலில் சென்ற மாதம் வெகு சிறப்பாக நடைபெற்ற மகா கும்பாபிஷேகப் பெருவிழாவை முன்னிட்டு நாளை (23/03/25) ஞாயிறு அன்று காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள்
மண்டலாபிஷேகப் பெருவிழா வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது!!!
தருமை ஆதினம் முன்னிலையில் வெகு சிறப்பாக நடைபெறவுள்ளது!!
நாள்:(23/03/2025) – பங்குனி 9ம் நாள்
கிழமை: ஞாயிற்றுக்கிழமை
நேரம்:காலை 10:30 மணிக்கு மேல் 12 மணிக்குள்
(22/03/25) சனிக்கிழமை மாலை விக்னேஸ்வர பூஜை,
முதற்கால யாகசாலை பூஜையும்
(23/03/25) ஞாயிற்றுக்கிழமை காலை இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் மகா பூர்ணாஹுதி மகா தீபாரதனையுடன் காலை 11 மணிக்கு மூலவர் சுவாமி மஹாபிஷேகம், 1008 சங்காபிஷேகம் (மண்டலாபிஷேகம்) தீபாராதனை
மதியம் 11:30 மணிக்கு – மூலவர் அம்பாள் மஹாபிஷேகம்,
108 சங்காபிஷேகம் (மண்டலாபிஷேகம்) தீபாராதனை
மாலை 8 மணிக்கு – பஞ்சமூர்த்திகள் வீதியுலா
சுவாமி அம்பாள் #புஷ்ப_பல்லக்கில் எழுந்தருளி வீதியுலா நடைபெறும்!!
அன்பர்கள், சிவநேயச் செல்வர்கள், பக்தகோடிகள் அனைவரும் மண்டலாபிஷேகப் பெருவிழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!
அனைவரும் வருக!! இறையருளும் குருவருளும் ஒருங்கே பெறுக!!

