Wednesday, March 11, 2026
HomeUncategorized‘தளபதி விலையில்லா வீடு’ வழங்கும் விழா - பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!

‘தளபதி விலையில்லா வீடு’ வழங்கும் விழா – பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்!

நடிகர் விஜய் நடத்தும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ‘தளபதி விலையில்லா வீடுகள்’ வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்டி, தற்போது திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சிவன் கோயில் தெருவில் பாபு மற்றும் சபீதா ஆகிய 2 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். இவர்களுக்கு தலா ரூ 1.70 லட்சம் மதிப்பீட்டில் 2 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பொன்னேரி தொகுதி தவெக தலைவர் சிலம்பரசன் ஏற்பாட்டில், அந்த 2 வீடுகளை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இன்று திறந்து வைத்தார். அத்துடன் வீடுகளுக்கு தேவையான வீட்டு உபயோகச் சாமான்கள், மளிகைச் சாமான்கள் உள்ளிட்டவற்றையும் அவர் வழங்கினார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments