தமிழாகரன் மதுரை ஆதின திங்களிதழ்

மதுரை ஆதீன 293 ஆவது ஸ்ரீலஸ்ரீ குருமகா சந்நிதானம் பதவியேற்ற சிறிது காலத்திலேயே சைவமும் தமிழும் தழைத்தோங்க பல முயற்ச்சிகளை எடுத்து வருகிறார்கள்.
அதில் ஒன்றாக தமிழாகரன் என்ற ஆதீன திங்களிதழ் ஒன்றை திருஞானசம்பந்த சுவாமிகள் குருபூசை திருநாளன்று முதல் பிரதியை திருக்கரங்களால் வெளியிட தருமை ஆதீன ஸ்ரீமத் திருஞானசம்பந்த தம்பிரான் சுவாமிகள் பெற்றுக்கொண்டார்கள். ஆதீனத்தின் வரலாறுகளும், சமய கருத்துகளும், திருமுறை விளக்கங்களுடன் இனி மாதம்தோறும் இலவச வெளியீடாக இந்த புத்தகம் வெளிவர உள்ளது.