அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியதாவது.
மூத்த பாஜக தலைவர்களில் ஒருவரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவராகத் திறம்படச் செயல்பட்டவருமான, அக்கா திருமதி Dr. தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்ததில் பெருமகிழ்ச்சி.
தமிழகத்தில் தாமரை நிச்சயம் மலரும் என்பதை உறுதியுடன் கூறி, அதற்காகக் கடினமாக உழைத்த அக்கா திருமதி Dr.தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் அரசியல் அனுபவமும், ஆலோசனைகளும், கட்சியின் வளர்ச்சிக்கான உத்வேகத்தைத் தொடர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறது. இவ்வாறு தனது அறிக்கையில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
