தமிழில் சந்திரமுகி சினிமா வெளிவந்து 19 வருடங்கள் ஆகிவிட்டது. 2005-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி வெளியானது.
பாசில் இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான மணிச்சித்திரத்தாழ் படம்தான், சந்திரமுகி சீரீஸின் மூலம். அதைத் தழுவி சௌந்தர்யா நடிப்பில் ஆப்தமித்ரா எடுக்கப்பட்டது. அதற்குப்பின் ஜோதிகா நடிப்பில் சந்திரமுகி வெளிவந்தது. அதன்பின் ஹிந்தியில் வித்யா பாலன் நடிப்பில் bhool bhulaiyaa-வாக இயக்கப்பட்டது. கங்கனா நடித்து சந்திரமுகி-2வும் வந்துவிட்டது.
உங்கள் பார்வையில், ‘நாகவல்லி’ கதாபாத்திரத்தை மிகசிறப்பாக திரையில் கொண்டு வந்தது யார் ? ஷோபனாவா ? ஜோதிகாவா ? சௌந்தர்யாவா ? அல்லது வித்யா பாலனா ?
