Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குனராக சைலேந்திர பாபு

தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குனராக சைலேந்திர பாபு

சைலேந்திர பாபு  சூன் 5, 1962 ம் ஆண்டு பிறந்தார். இவர் 1987 ல் தமிழ்நாடு பணிநிலைப் பிரிவின் இந்தியக் காவல் பணி அதிகாரி ஆகப் பணியைத் தொடந்தார். அவர் 2012 வரை தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுவின் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார் . 

சென்னைப் பல்கலைக்கழகத்தில் குற்றவியலில் முனைவர் பட்டம் மட்டுமல்லாது பெருவேட்கையுடைய வாசகர்.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பு முடித்து, மதுரையில் அமைந்துள்ள விவசாயப் பல்கலைக்கழகத்தில், விவசாயத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றார். கோயம்புத்தூர் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொதுச்சட்டம் இளங்கலை பட்டமும் மக்கள் தொகை கல்வியில் முதுகலைப் பட்டமும் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் அவருடைய “Missing Children” ஆய்வறிக்கைக்காக முனைவர் பட்டம் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மனித வள வணிக நிர்வாக படிப்பில் முதுநிலைப் பட்டம் பெற்றார்.

ஏப்ரல் 2014 ல் காவல்துறை கூடுதல் தலைமை இயக்குனராக (Assistant Director of General Police) பதவி உயர்வுப் பெற்ற சையிலேந்திர பாபு தற்போது தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு படைக்குழுவின் தலைமை இயக்குனராக பணியில் உள்ளார்.

நேர்மையின் அடையாளம்
மாணவர்கள் மத்தியில் அடிக்கடி self development தலைப்பில் உரையாற்றுபவர்
விவசாயம் பட்ட படிப்பு படித்தவர்
முனைவர் பட்டமும் வாங்கியுள்ளார்.
இந்திய தடகள அணியின் மேலாளராக இருந்துளார்.
பல புத்தகங்கள் எழுதியுள்ளார். காவல் துறையில் பணி புரியும்போது இது மிகவும் கடினமான விஷயமாகும்.
சிவகங்கையில் ADSP ஆக பணியாற்றியபோது ஏரிக்குள் விழுந்த பேருந் திலிருந்து மக்களை காப்பாற்ற தானே எரிக்குள் குதித்து நிறைய பேர்களின் உயிரை காப்பாற்றினார்.
இந்த வயதிலும் long distance cycling செய்து இளைஞர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

இன்னும் நிறைய…….

புதிய டி.ஜி.பி.க்கு நமது குழுவின் சார்பில் வாழ்த்துகள்…

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments