Home Uncategorized தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை தியாகராயர் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ள பாரதிய ஜனதா தலைமை அலுவலகத்தில் நேற்று நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பகுதியில்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 

முன்னதாக பாஜக தலைமை அலுவலகத்தி கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 

Exit mobile version