Wednesday, March 4, 2026
HomeUncategorizedதமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை  ரத்து  செய்ய வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்கு நேர்முகத் தேர்வுகளை  ரத்து  செய்ய வேண்டும் – அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்

ஆந்திராவில் அரசு பணியாளர் தேர்வில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளைத் தடுக்கவும்  குரூப் -1 பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு பணிகளுக்கும் நடத்தப்பட்டு வந்த நேர்காணல் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க சிறப்பான முடிவாகும்!

தமிழ்நாட்டிலும் அரசு பணிகளுக்கான நேர்காணல்களில் பெருமளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில், தமிழகத்திலும் அனைத்து நிலை அரசு பணிகளுக்கும்  நேர்காணலை ரத்து செய்ய தமிழக அரசு முன்வர வேண்டும்!

எழுத்துத் தேர்வுகளின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் அனைத்துப் பணிகளுக்கும் தகுதியானவர்களை தேர்வு செய்வது தான் சரியாக இருக்கும்; வெளிப்படைத்தன்மையுடன் இருக்கும்; முறைகேடுகளைத் தடுக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments