Home Uncategorized தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் வாக்குப் பதிவு ..

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தலில் வாக்குப் பதிவு ..

இன்னிக்கு மாலை முடிவுகள் வெளியாகிடும். தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு 2 வருடத்துக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்த சங்கத்தில் இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள் என 2 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக இருந்தனர்..

ஆனா இப்போது வாக்குரிமை 1907 பேருக்குத்தானாம். தற்போதைய தலைவர் ஆர்.கே.செல்வமணியின் பதவிகாலம் முடிந்ததால், புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்படுது. இந்தத் தேர்தல் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா காரணமாக, தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், சென்னை கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில் உள்ள தாய் சத்யா பள்ளி வளாகத்தில், இந்த தேர்தல் இன்று இப்போது நடந்து வருது. பன்னிரண்டு மணியை நெருங்கும் இந்நேரம் வரை சுமார் 738 பேர் வாக்களித்தனர் தலைவர், செயலாளர், பொருளாளர், 2 துணை தலைவர்கள், 4 இணை செயலாளர்கள், 12 செயற்குழு உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படணும். அந்த வகையில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், ஆர்.கே.செல்வமணி தனித்தனி அணியாக போட்டியிடுகின்றனர்.

இயக்குநர்கள் மாதேஷ், எழில் துணைத் தலைவர்களாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலை 7 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மாலையே முடிவுகள் அறிவிக்கப்படுது. வழக்கறிஞர் ச.செந்தில்நாதன் தேர்தல் அதிகாரியாக செயல்படுறார்.

Exit mobile version