Friday, October 9, 2026
Homeசெய்திகள்தமிழகத்தில் அதிரடி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்! புதிய உள்துறைச் செயலாளராக ஏ. கார்த்திக் நியமனம்!

தமிழகத்தில் அதிரடி: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்! புதிய உள்துறைச் செயலாளராக ஏ. கார்த்திக் நியமனம்!

தமிழகத்தில் உள்துறைச் செயலாளர் உள்பட பல மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு முதன்மைச் செயலாளர் எம். சாய் குமார் தலைமையில் அரசாணை (G.O. (Rt.) No.3654, நாள்: 09.10.2026, பொது (சிறப்பு-அ) துறை) வெளியிட்டுள்ளது.

இதன்படி, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த டாக்டர் கே. மணிவாசன், நில நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்; தமிழ்நாடு சிறுதொழில் மேம்பாட்டுக் கழக (TANSIDCO) தலைவராக இருந்த ஏ. கார்த்திக், புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த ராஜேஷ் லக்கானி, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவராகவும் நிர்வாக இயக்குநராகவும் (மின் உற்பத்தி, பகிர்மானம் மற்றும் பசுமை ஆற்றல் கழகத் தலைவராகவும்) நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்வாரியத் தலைவராக இருந்த வி. அருண் ராய், நிதித்துறை (செலவினங்கள்) செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்; நிதித்துறை (செலவினங்கள்) செயலாளராக இருந்த என். வெங்கடேஷ், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளராகப் பொறுப்பேற்கிறார். மேலும், ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, தாம்பரம் மாநகராட்சி ஆணையராகவும்; செய்யாறு சார் ஆட்சியர் அம்பிகா ஜெயின், ஆவடி மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநர் சிவகிருஷ்ண மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராகவும்; தேனி மாவட்ட ஆட்சியர் வைத்யநாதன், குடிநீர் வடிகால் வாரிய இணை நிர்வாக இயக்குநராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments