Wednesday, July 15, 2026
Homeசெய்திகள்லஞ்சப் புகார்களுக்கு இனி WhatsApp போதும்... தமிழக அரசு வெளியிட்ட புதிய உதவி எண்!

லஞ்சப் புகார்களுக்கு இனி WhatsApp போதும்… தமிழக அரசு வெளியிட்ட புதிய உதவி எண்!

அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டாலோ அல்லது லஞ்சக் கோரிக்கைகள் விடுக்கப்பட்டாலோ, அதுகுறித்து பொதுமக்கள் எளிதாகப் புகார் அளிக்கும் வகையில் 94981 80936 என்ற புதிய வாட்ஸ்அப் உதவி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகத் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சாய் குமார் அனைத்து அரசுத் துறைகளுக்கும் அதிரடியான சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த உத்தரவில், தமிழக அரசின் அனைத்துத் துறை அதிகாரப்பூர்வ இணையதளங்களிலும் இந்தப் புதிய வாட்ஸ்அப் உதவி எண் கட்டாயம் இடம் பெற வேண்டும் என்றும், அதனுடன் லஞ்ச ஒழிப்புத் துறையின் (DVAC) இணையதள லிங்க் இணைக்கப்பட வேண்டும் என்றும் திட்டவட்டமாக அறிவுறுத்தியுள்ளார்.

அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், ஊழலற்ற சேவையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கவும் எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை, அரசு அலுவலகங்களில் லஞ்சப் புகார்களை உடனுக்குடன் அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப் பெரிதும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments