Tuesday, July 21, 2026
Homeசெய்திகள்விளையாட்டில் புதிய அத்தியாயம்: தமிழ்நாட்டில் அதிநவீன Multi Sports Centre அமைப்பு!

விளையாட்டில் புதிய அத்தியாயம்: தமிழ்நாட்டில் அதிநவீன Multi Sports Centre அமைப்பு!

தமிழகத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய பிரம்மாண்டமான பன்னோக்கு விளையாட்டு மையம் (State of the Art Multi Sports Centre) ஒன்றை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தை உலகத் தரத்தில் வடிவமைப்பதற்கான முதற்கட்டத் திட்டமிடல் பணிகளுக்காக, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய (SDAT) அதிகாரிகள் குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்.

அங்குள்ள நவீன விளையாட்டு அரங்குகள், உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மை முறைகளை பார்வையிட்டுள்ள அதிகாரிகள் குழு, அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் அமையவிருக்கும் புதிய பன்னோக்கு விளையாட்டு மையத்திற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்கவுள்ளதாகத் தெரிகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments