Home செய்திகள் தமிழகத்தில் 65 போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் நிலையங்கள்.. விஜய் அரசின் அதிரடி!

தமிழகத்தில் 65 போதைப்பொருள் தடுப்புப் பிரிவு காவல் நிலையங்கள்.. விஜய் அரசின் அதிரடி!

தமிழகத்தை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கில், முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு அதிரடியான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 65 பிரத்யேக ‘போதைப்பொருள் தடுப்புப் பிரிவு’ (Anti-Narcotic Task Force – ANTF) காவல் நிலையங்களை அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இந்தத் தனிப்படை நேரடியாக முதலமைச்சரின் அலுவலக (CMO) மேற்பார்வையின் கீழ் இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் நடமாட்டத்தை வேரறுக்க ஏழு அம்சத் திட்டத்தை அரசு வகுத்துள்ளது:

ஆன்லைன் கண்காணிப்பு: சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் வாயிலாக நடைபெறும் போதைப்பொருள் விற்பனையைத் தீவிரமாகக் கண்காணித்தல்.

குழுக்களுக்கு முற்றுப்புள்ளி: போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் ஒழுங்கமைக்கப்பட்ட கும்பல்களைக் (Drug Syndicates) கண்டறிந்து முடக்குதல்.

சொத்துக்கள் பறிமுதல்: போதைப்பொருள் விற்பனையாளர்களின் சட்டவிரோதச் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல்.

மீட்பு நடவடிக்கைகள்: போதைப்பொறு பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுக்கத் தகுந்த மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்துதல்.

விழிப்புணர்வு முகாம்கள்: பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே (மே 10, 2026) இதற்கான கோப்பில் கையெழுத்திட்ட விஜய், போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவது தனது அரசின் முதன்மை முன்னுரிமைகளில் ஒன்று என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார். 37 மாவட்டங்கள் மற்றும் 9 மாநகரக் காவல் எல்லைகளுக்குட்பட்ட பகுதிகளில் இந்தத் தடுப்புப் பிரிவு காவல் நிலையங்கள் செயல்பாட்டிற்கு வரவுள்ளன.

Exit mobile version