தற்போது, தமிழ் சினிமாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யாருமே தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. இவர் முதலில் சிறிய வேடங்களில் நடித்து, பின் காமெடி வேடங்கள், அதனையடுத்து, நடிகை நயன்தாராவுடன் ஜோடி சேர்ந்து கதையின் நாயகன் நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். தற்போது அஜித்தின் ‘வலிமை’ திரைப்படத்திலும், விஜய்யின் ‘பீஸ்ட்’ திரைப்படத்திலும், மிர்ச்சி சிவா இயக்கத்தில் ஆர்.கண்ணன் இயக்கும் ‘காசேதான் கடவுளடா’ என இவர் கைவசம் அதிக படங்கள் இருக்கின்றன.
