Saturday, April 18, 2026
HomeUncategorizedதஞ்சைக்கு பெருமை சேர்த்த தஞ்சை பெண் காவலர்!

தஞ்சைக்கு பெருமை சேர்த்த தஞ்சை பெண் காவலர்!

உலக கின்னஸ் சாதனையில் இவர் இடம் பிடிப்பாரா? தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவால் அவர்களால் பாராட்டப்படுவாரா? தமிழக முதல்வர் அவர்களால் விருதுகள் வழங்கப்படுமா?.

தேசிய கீதம் முதன் முதலில் தமிழில் மொழிபெயர்த்து தஞ்சை பெண் காவலர் செல்வி. ஹேமலதா தனது இனிமையான குரல்களால் இவ்வுலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

இதனை கண்டு பலரும் வியப்புற்று பார்க்கின்றனர்.

இது போன்று இதுவரையிலும் யாரும் இந்த தேசிய கீதத்தை தமிழில் மொழி பெயர்த்து பகிரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும் தஞ்சை சோழ தேசத்திற்கு பெருமையை சேர்த்த தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் தஞ்சை பெண் காவலர் செல்வி. ஹேமலதா தஞ்சை மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளும் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் பொதுமக்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இதுபோன்று தனக்குள் இருக்கும் தனி திறமையை இவ்வுலகிற்கு வெளிக்கொண்டு வருவதில் பத்திரிகை சுதந்திரத்தை தவிர வேறு எதுவும் எடுத்துச் செல்ல இயலாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இவர்களுக்கு விருது மற்றும் கேடயம் தமிழக முதல்வர் அவர்களால் மற்றும் தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களால் வழங்கப்படுமா? காத்திருந்து பார்ப்போம் கனவு நினைவாகட்டும்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments