தனுஷின் 55-வது படத்தை ‘அமரன்’ இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற நிலையில், இயக்குனர் தனது எக்ஸ் தளத்தில் தனுசுடன் எடுத்த புகைப்படத்தையும், பூஜை காட்சிகளையும் பகிர்ந்து மகாசிவராத்திரி தினத்தில் அனைவருக்கும் பாசிட்டிவ் எனர்ஜி வேண்டி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தை ‘கோபுரம் பிலிம்ஸ்’ அன்புசெழியன் தயாரிக்க உள்ளார்.
