கன்னியாகுமரி மாவட்டத்தில் 1950ஆம் ஆண்டு பிறந்தவர் வசந்தகுமார். காங்கிரஸ் கட்சி தலைவர் குமரி ஆனந்தனின் இளைய சகோதரர் ஆவார்.
மாத தவணையில் அனைத்து வீட்டு உபயோகப்பொருட்கள் விற்கும் திட்டத்தை தொடங்கியது, வசந்த் அண்ட் கோவின் மிகப்பெரிய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது எனலாம். முதன்முதலில் நாற்காலி தயாரிக்கும் தனது நண்பரிடம் இருந்து
நாற்காலியை வாங்கி அதனை விற்கத்தொடங்கினார் வசந்தகுமார். ஆரம்பத்தில் மிதிவண்டியில் வீடுவீடாக சென்று பொருட்களை விற்று, அவற்றிற்கு தவணை முறையில் பணம் வசூலித்தார். தமிழகத்தில் மாதத்தவணையில் வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்து வந்த வசந்த் அண்ட் கோ மிக விரைவிலேயே பெரிய அளவில் பிரபலமானது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம் ஆகிய மாநிலங்களில் மொத்தம் 60க்கும் அதிகமான கிளைகள் கொண்டுள்ளன. வசந்த் தொலைக்காட்சியை 2008 ஆம் ஆண்டில் தொடங்கி நடத்தினார் 2006 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் நாங்குநேரி தொகுதியில் வெற்றிபெற்று தமிழக சட்டசபைக்கு தேர்வானார்.
ஒரு தொழிலதிபர் எப்படி ஜனநாயக அரசியலில் கொள்கை வழியிலும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்பதற்கு வசந்தகுமார் ஒரு சிறந்த முன்னுதாரணம். கொரோனாவில் பாதிக்கப்பட்டு மரணமடைந்தாலும் மேல் அழுத்தங்களின் விளைவாக முறையான உடல் அடக்கம் செய்யப்பட்டவரிவர் என்பதும் நினைவில் நிற்கிறது
