தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதம் அதிகரித்தாலும், வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து தோல்விக்கான காரணங்கள், தேர்தலில் பா.ஜ.,வினரின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மதுரைக்கு மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், விருதுநகருக்கு கரு.நாகராஜன், திருச்சிக்கு ராமசீனிவாசன் உட்பட ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இப்பொறுப்பாளர்கள் தொகுதிவாரியாக சென்று ஆய்வு செய்ய உள்ளனர். சட்டசபை, லோக்சபா தொகுதி பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், பார்வையாளர்கள், அணிப்பிரிவினர் உட்பட கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தி அதனை மாநில தலைமைக்கு அறிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.
இக்குழுவின் செயல்பாடுகள் குறித்தும், அதற்கு ஒத்துழைக்கவும் வலியுறுத்தி, மாநில அமைப்புச் செயலாளர் கேசவவிநாயகம் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஆடியோ அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
