தொண்டர்களின் எதிர்பார்ப்புகள், ஏக்கங்கள், முழக்கங்கள் நிச்சயம் நிறைவேறும் என வி.கே.சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
எத்தனை சோதனை வந்தாலும் தொண்டர்களின் உறுதியோடு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் கழகத்தை காப்போம்; கவலை வேண்டாம் எனவும், மேலும், ஒவ்வொரு தொண்டரின் கண்களிலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பார்க்க முடிந்தது.
தொண்டர்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண் போகாத வகையில் தமிழக மக்களுக்காக எஞ்சியுள்ள வாழ்நாட்களை அர்ப்பணிப்பேன் என மேலும் அந்த அறிக்கையில் சசிகலா தெரிவித்தார்.

