விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இ்ந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று பெரிய ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து இன்று இரண்டவாது பாடலான தீ என்ற பாடல் இன்று வெளியானது. இதனை நடிகர் சிம்பு பாடியிருக்கிறார்.
இப்பாடல்தான் தற்போது சமூக வாசிகளிடையே, தீயாய் பகிரப்படுகிறது. அந்தப் பாடல் இதோ…
