இயக்குநர் பாலா மற்றும் நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாகி வந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இயகுநர் பாலா, “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன்.
ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் என் தம்பி சூர்யா.
