Friday, March 13, 2026
Homeஆன்மீகம்குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில், திருகருப்பறியலூர்- ஆன்மீக தகவல்கள்!

குற்றம் பொறுத்த நாதர் திருக்கோவில், திருகருப்பறியலூர்- ஆன்மீக தகவல்கள்!

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒவ்வொரு ஆலயங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு..

அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனாக விளங்கும் அந்த இறைவன் எம்பெருமான் சிவபெருமான் பல்வேறு தோஷங்களையும் பாவங்களையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் கூடிய கடவுளாக பல்வேறு ஆலயங்களில் பல்வேறு பெயர்களில் அமர்ந்து அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்..

அந்த வகையில் குற்றம் பொறுத்த நாதராக அருள் புரியும் தலை ஞாயிறு திருத்தலத்தை  பற்றி தான் இப்பொழுது காண போகிறோம்..

மயிலாடுதுறை அருகே உள்ள தலைஞாயிறு (திருக்கருப்பறியலூர்) அருள்மிகு குற்றம் பொறுத்த நாதர் திருக்கோயில் காவிரி வடகரையில் அமைந்துள்ள 27-வது பாடல் பெற்ற தேவாரத் தலமாகும். 

இங்கு சிவபெருமான் குற்றம் பொறுத்த நாதராகவும்அம்மன் கோல்வளையாள் (விசித்திர பாலம்பிகை) ஆகவும் அருள்பாலிக்கின்றனர். 

இத்தலம் சூரிய தோஷ நிவர்த்தி தலமாகவும் சூரியன் இந்திரன் அனுமன் ஆகியோர் வழிபட்ட தலமாகவும் கருதப்படுகிறது.

இக்கோவிலின் இறைவனான சிவபெருமான் “குற்றம் பொறுத்தநாதர்”, “அபராதமேஸ்வரர்” என்கிற பெயரிலும், அம்பாள் “கோல்வளை நாயகி” என்கிற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்.

சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாக இது இருக்கிறது.  கோவிலின் தல விருட்சமாக கொடிமுல்லை இருக்கிறது. கோவிலின் தீர்த்தம் சூர்ய புஷ்கரணி, இந்திர தீர்த்தம், பொற்றாமரை என்கிற பெயர்களில் அழைக்கப்படுகிறது.

 புராணகாலத்தில் இவ்வூர் கருப்பறியலூர், கர்மநாசபுரம் என அறியப்பட்டது. 

தேவாரம் பாடல் பெற்ற சிவத் தலமாக இக்கோவில் இருக்கிறது. 

தல புராணங்களின் படி இலங்கை வேந்தன் இராவணனின் மைந்தன் மேகநாதன் தேவலோக வேந்தனான இந்திரனை வெற்றி கொண்டு மேகநாதன் என்கிற பெயர் பெற்றான். ஒரு முறை படிக விமான பறந்து கொண்டு கொண்டிருந்த போது அந்த விமானம் தடை ஏற்பட்டு யே நின்று விட்டது. 

இதை கண்ட இந்திரஜித் விமானத்திற்கு கீழே பார்த்தபோது இத்தல சிவபெருமானின் கோபுரத்தின் மீது பறந்ததால் தான் இத்தடை ஏற்பட்டது என எண்ணி வருந்தினான். 

பிறகு தலத்தில் இறங்கி, இக்கோவிலின் குளத்தில் நீராடி தனது தவறை உணர்ந்து சிவபெருமானை வழிபட அந்த தடை நீங்கியது.

பிறகு அவனின் விமானம் தடையில்லாமல் பறக்க ஆரம்பித்தது. இக்கோவிலின் சிவலிங்கத்தின் அழகில் மயங்கிய மேகநாதன், இந்த சிவலிங்கத்தை பெயர்த்து இலங்கைக்கு கொண்டு செல்ல முயன்றான். அந்த முயற்சியில் தோல்வியுற்று மயங்கி விழுந்தான்.

 இதைக் கேள்விப்பட்ட இலங்கை வேந்தன் இராவணன் இத்தலத்திற்கு வந்து சிவபெருமானிடம் தன் மகனின் தவறுக்கு வருந்தி அவனை மன்னிக்குமாறு வேண்டினான். அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் இந்திரஜித்தின் குற்றத்தை பொறுத்து அருள் புரிந்ததால் “குற்றம் பொறுத்த நாதர்” என்கிற பெயர் இத்தல சிவ பெருமானுக்கு ஏற்பட்டது.

இந்திரன், இறைவன் என்றறியாமல் அவர்மீது வச்சிரம் எறிந்த குற்றத்தைப் பொறுத்தருளியமையால் குற்றம் பொறுத்த நாதர் ஆனார் என்பது புராணம் கூறும் வரலாறு ஆகும்.

 மேலும் ராவணனைக் கொன்ற பாவத்தைப் போக்க ராமர் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகிறது.

பக்தர்கள் வசதிக்காக ஆலயம்

காலை 7:30 – 11:00மாலை 5:00 – 8:00 மணி வரை. திறந்திருக்கும். 

இங்கு வழிபட தோஷங்கள் குறிப்பாக சூரிய தோஷம் நிவர்த்தியாகி செய்த குற்றங்களுக்கான பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. 

ஆன்மீக அன்பர்கள் ஒரு முறை குற்றம் பொறுத்த நாதரை தரிசனம் செய்து தங்கள் வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் தோஷங்களையும் போக்கிக் கொள்ளலாம். 

ஓம் நமச்சிவாய..

அறந்தாங்கி சங்கர்

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments