Home Uncategorized ‘தக் லைஃப்’ படத்திற்கு சிம்பு, த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

‘தக் லைஃப்’ படத்திற்கு சிம்பு, த்ரிஷா வாங்கிய சம்பளம் எவ்ளோன்னு தெரியுமா?

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள ‘தக் லைஃப்’ திரைப்படத்துக்காக சிம்பு, த்ரிஷா வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நாயகன் திரைப்படத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 37 ஆண்டுகள் கழித்து மணிரத்னம், கமல்ஹாசன் இருவரும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளனர். இதனாலேயே இப்படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு அதிகமாக உள்ளது. 

படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன. இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஜிங்குச்சா’, ‘விண்வெளி நாயகா’, ‘அஞ்சுவண்ண பூவே’, ‘முத்த மழை’ உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் 5ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், டிக்கெட் புக்கிங் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தக் லைஃப் திரைப்படத்தில் சிம்புவிற்கு கமல்ஹாசனுக்கு நிகரான ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்திற்காக சிம்புவிற்கு கொடுக்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்திற்காக சிம்புவிற்கு ரூ. 40 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவரின் திரை வாழ்க்கையில் அதிக சம்பளம் வாங்குவது இந்த படத்திற்குத்தான். படத்தில் இந்திராணி கதாபாத்திரத்தில் த்ரிஷா நடித்துள்ளார். அதற்கு அவருக்கு ரூ.12 கோடி வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Exit mobile version