Home வானிலை இடியுடன் கூடிய மழையால் குளிர்ந்த சென்னை… மகிழ்ச்சியில் மக்கள்!

இடியுடன் கூடிய மழையால் குளிர்ந்த சென்னை… மகிழ்ச்சியில் மக்கள்!

பல நாட்களாக ஏமாற்றி வந்த நிலையில், நேற்று சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளின் பல இடங்களில் இந்த பருவமழைக் காலத்தின் முதல் நல்ல இடியுடன் கூடிய மழைப் பொழிவு பதிவாகியுள்ளது.

கடல்காற்று காரணமாக உருவாகும் இடியுடன் கூடிய மழை, இன்றோ அல்லது மாலையிலோ ஒரு சில இடங்களில் பெய்வதற்கான நல்ல வாய்ப்புகள் உள்ள அதே வேளையில், தமிழகத்தின் உள்மாவட்டச் சமவெளிப் பகுதிகளின் பல இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழைப்பொழிவு தொடர்ந்து நீடிக்கும்.

மற்றொரு மகிழ்ச்சியான செய்தியாக, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்கு 39 முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகி வந்த கடுமையான வெப்ப நாட்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version