Home Uncategorized சிக்ஸ் ஏர் பேக் பாதுகாப்பு அம்சத்துடன் டொயோட்டா கிளான்ஸா(TOYOTA GLANZA)!

சிக்ஸ் ஏர் பேக் பாதுகாப்பு அம்சத்துடன் டொயோட்டா கிளான்ஸா(TOYOTA GLANZA)!

டொயோட்டோ கீரிலோஸ்கர் மோட்டார் நிறுவனம் கிளான்ஸா மாடலில் அனைத்து வேரியண்ட்களிலும் ஸ்டாண்டர்ட் அம்சமாக ஆறு ஏர்பேக் இடம்பெறும் என அறிவித்துள்ளது. இதன் தொடக்க ஷோரூம் விலை சுமார் ₹6.9 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

கிளன்ஸா மாடலின் இ, எஸ், ஜி மற்றும் வி ஆகிய நான்கு வேரியண்ட்களிலும், இனி 6 ஏர் பேக்குகள் ஸ்டாண்டர்ட் அம்சமாக இடம்பெற்றிருக்கும். டாப் வேரியன்ட் விலை சுமார் ₹ 10 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல் பிரஸ்டீஜ் எடிஷன் காரையும் அறிமுகம் செய்துள்ளது. இதில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றிருக்கும். இது அதிகபட்சமாக 90 எச்.பி பவரையும் 113 என்.எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது மட்டும் இன்றி டொயோட்டோ ஹைரைடர் பிரஸ்டீஜ் பேக்கேஜ் போன்று டீலர் அளவில் பொருத்திக் கொள்ளக்கூடிய உதிரி பாகங்களும் கிடைக்கும். பிரஸ்டீஜ் எடிஷனுடன் வழங்கப்படும் உதிரி பாகங்கள் ஜூலை 31 வரை மட்டுமே கிடைக்கும் என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது.
 

Exit mobile version